போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
பண்ருட்டி : பண்ருட்டி போக்குவரத்து காவல் துறை சார்பில் பனிக்கன்குப்பம் செயின்ட்பால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகள் 18 வயது நிறைவடைந்து ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாது. பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யக் கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும், போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.