உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தேவநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், அறிவழகன் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு, பொருளாதார பின்னடைவு ஏற்படுகிறது எனவும் பேசினர். அனைவரும் போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை