துர்க்கை அம்மன் கோவிலில் செடல்
புதுச்சத்திரம், : வேளங்கிப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலில், செடல் உற்சவம் நாளை நடக்கிறது. புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலில், செடல் உற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு பாரதம், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று ((29ம் தேதி) இரவு 9.00 மணிக்கு முத்து பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. நாளை 30ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம் 1.00 மணிக்கு காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.