மேலும் செய்திகள்
மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
05-Aug-2025
பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்த மாணவர்கள் பள்ளி நண்பர்கள் குழு துவக்கி, பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், இப்பள்ளியில் கடந்தாண்டு அரசு பொதுத் தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கி, அரசு பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். விழாவில், பள்ளி நண்பர்கள் குழு சுமன், மலர்மணி, மணிமுத்தரசன், பரசுராமன், பாஸ்கர், புஷ்பராஜ், அய்யப்பன், கார்த்திக், மகேஷ், அசத்துல்லா, ஜம்புலிங்கம், சுதாகர் நாகராஜ், சண்முகம், சிவராஜ் பங்கேற்றனர்.
05-Aug-2025