மின் பகிர்மான கழகம் விழிப்புணர்வு வகுப்பு
கடலுார்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் பணியாளர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர்கள், கட்டட ஒந்ததாரர்களுக்கான மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடந்தது.கடலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை பயிற்சி மையம் சார்பில் பணியாளர்கள், மின் ஒப்பந்ததாரர்கள், கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு மின் பாதுகாப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது, மின் துறை பணியாளர்கள், மின் ஒப்பந்ததாரர்கள், கட்டட ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி செயற்பொறியாளர் ரஞ்சித் குமரன், உதவி மின் பொறியாளர் லோகநாதன் செய்திருந்தனர்.