மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்.
09-Aug-2025
கடலுார் : கடலுார் கேப்பர்மலை, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல், மாநில துணைத்தலைவர் தேசிங்கு, மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, மாநில செயற்குழு கோவிந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 6 மற்றும் 7ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
09-Aug-2025