உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய நெடுஞ்சாலையில் எமர்ஜென்சி கால் பாக்ஸ்

தேசிய நெடுஞ்சாலையில் எமர்ஜென்சி கால் பாக்ஸ்

விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும்போது, போன் வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது போனை தவற விட்டாலோ மற்றும் வாகனங்கள் பழுது ஏற்பட்டு நடு வழியிலேயே நின்று விடும் போது, அவசர உதவிக்கு 'எமர்ஜென்சி கால் பாக்ஸ்' வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலுார் பூண்டியாங்குப்பத்தில் இருந்து, சீர்காழி சட்டநாதபுரம் வரை 2 கி.மீட்டர் துாரத்திற்கு இரண்டு பக்க சாலைகளிலும் நேருக்கு நேராக 2 என மொத்தம் 54 'எமர்ஜென்சி கால் பாக்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. 'எமர்ஜென்சி கால் பாக்சில்' பட்டனை அழுத்தினால் போதும், கொத்தட்டை டோல்கேட்டில் உள்ள கன்ட்ரோல் அறைக்கு தகவல் சென்றுவிடும். அங்குள்ள அதிகாரிகள் கேமரா மூலம் பார்த்து விட்டு போன் செய்தவர்களிடம் பேசி உடனடியாக அவர்களுக்கு தேவையான ஆப்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினரை சம்பவஇடத்திற்கு அனுப்பி வைப்பர். தற்போது, ஒத்திகை பணி மட்டும் நடந்து வருகிறது. வரும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து எமர்ஜென்சி கால் பாக்ஸ் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !