உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருப்பு சட்டை அணிந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கருப்பு சட்டை அணிந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் கந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ் வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். மாநில பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் பேசினர். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி