மேலும் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
07-Oct-2025
கடலுார்; கடலுாரில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல இடங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், ஊதிய உயர்வு குறித்த பதிவாளர் சுற்றறிக் கையில் உள்ள குளறு படிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்ளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6ம் தேதி கடலுார் மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். இதன் காரண மாக மாவட்டத்தில் பல இடங்களில் ரேஷன் கடை கள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
07-Oct-2025