மேலும் செய்திகள்
பணி நியமன ஆணை வழங்கல்
16-Apr-2025
சிதம்பரம்.; சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.கல்லுாரி செயலாளர் பாபு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மாலதி வரவேற்றார். சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்தது. சிறப்பு விருந்தினர் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார், தேர்வு செய்யப்பட்ட 516 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசினார். கல்லுாரி வேலை வாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் அபிலேஷ் குமார் நன்றி கூறினார்.
16-Apr-2025