உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

கடலுாரில் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

கடலுார் : கடலுாரில், வரும் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி, கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றன. முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என, கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை