மேலும் செய்திகள்
கடலுாரில் புதுப்பிக்கப்பட்ட டவுன்ஹால் திறப்பு
19-Sep-2025
நெய்வேலி; நெய்வேலியில் இந்திய இன்ஜினியர்கள் கழகம் சார்பில் 58வது இன்ஜினியர்கள் தின விழா நடந்தது. என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கினார். என்.எல்.சி., சுரங்கத்துறை இயக்குநர் டாக்டர் சுரேஷ் சந்திர சுமன், மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், மின்துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் டாக்டர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். இந்திய இன்ஜினியர்கள் கழக நெய்வேலி மையத்தின் கவுரவ செயலாளர் இரணியன் வரவேற்றார். விழாவில், மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகள், பயிற்சி இன்ஜினியர்களுக்கு 'சமீபத்திய பொறியியல் முன்னேற்றங்கள்' தலைப்பில் வினாடி-வினா போட்டிகள் நடந்தன. போட்டியில் கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இணை செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
19-Sep-2025