உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயணியிடம் பர்ஸ் அபேஸ் ஈரோடு தம்பதி கைது

பயணியிடம் பர்ஸ் அபேஸ் ஈரோடு தம்பதி கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணியிடம் பர்ஸ் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு 9:00 மணியளவில், போதையில் துாங்கிக் கொண்டிருந்த பயணியிடம் பர்ஸ் திருடியதாக, சக பயணிகள் இருவரை பிடித்து புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்டவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த முருங்கதொழுவு சல்லிமேடு பகுதியை சேர்ந்த ராஜி மகன் வடிவேல், 44, இவரது மனைவி மேனகா, 37, என்பது தெரிந்தது. இவர்களிடம், பயணியிடம் 6,500 ரொக்கத்துடன் திருடிய பர்ஸ், 2 அடி நீளத்தில் ஒரு இரும்பு கடப்பாறை, சில்லரை காசுகள் இருந்தன. இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வடிவேல், மேனகா இருவரையும் கைது செய்தனர். மேலும், சில்லரை காசுகள் அதிகளவு இருந்ததால், ஏதேனும் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டனரா என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை