கடலுாரில் துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
கடலுார் ;தமிழக துணை முதல்வர் உதயநிதி புதுச்சேரியில் இருந்து காலை 9:00 மணிக்கு கடலுார் வருகை தருகிறார்.இது குறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:துணை முதல்வர் உதயநிதி காலை 9:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கடலுார் வருகை தருகிறார். அவருக்கு கடலுார் ஆல்பேட்டையில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 10:00 மணிக்கு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி 683 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.11:15 மணிக்கு கடலுார் துறைமுகம் சங்கரன் தெருவில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கருணாநிதி நுாலகத்தை திறந்து வைக்கிறார்.11:45 மணிக்கு கடலுார் துறைமுகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.மதியம் 1:00 மணிக்கு கடலுார் பீச் ரோடு சி.கே.பள்ளி வளாகத்தில் உதயநிதி பிறந்த நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் வழங்குகிறார். மாலை 4:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.