உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கண் கிகிச்சை முகாம் 

தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கண் கிகிச்சை முகாம் 

கடலுார் : கடலுார் தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம், பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில் தென்னிந்திய ரெட்டி ஜன சங்கத் தலைவர் முத்தமல்லா ரெட்டியார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், 687 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுக்கு கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.கண் புரை குறைபாடு உள்ள 60 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 36 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம டிரஸ்ட் நிர்வாகி முத்துவரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை