உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் கண் சிகிச்சை முகாம்

விருத்தாசலத்தில் கண் சிகிச்சை முகாம்

மந்தாரக்குப்பம்: நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஜோதி கண் பரிசோதனை பராமரிப்பு மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நடந்த முகாமில், திட்டத் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் சந்திரமவுலி, முன்னாள் ரோட்டரி உதவி ஆளுநர் பாலாஜி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் செல்வராசு, முகாமை துவக்கி வைத்தார். முகாமில் ஜோதி கண் பராமரிப்பு மைய டாக்டர் லாவண்யா தலைமையிலான குழுவினர் கண் மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறித்து பரிசோதனை செய்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் ஆசைதம்பி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி