தொழிற்சாலை விபத்து பா.ம.க., சாலை மறியல்
கடலுார்: சிப்காட் தொழிற்சாலையில் வெளியான நச்சுப்புகை சம்பவத்தை கண்டித்து பா.ம.க., வினர் கடலுார் அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியல் செய்தனர். கடலுார், சிப்காட் தனியார் தொழிற்சாலையில் நேற்று பைப் லைன் வெடித்து மஞ்சள் நிற புகை வெளியானது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட் டனர். இந்நிலையில் சிப்காட் தொழிற்சாலைகளில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்றிரவு பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் 9:15 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டி.எஸ்.பி.,ரூபன்குமார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, 9:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.