உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

கடலுார்: மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில், கணவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலுார் முதுநகர் அடுத்த அன்னவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்,29; இவருக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த மீரா,29; என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மீரா, 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். மனைவி பிரிந்து சென்ற மனவருத்தத்தில் இருந்த கிருஷ்ணராஜ், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ