மேலும் செய்திகள்
திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை
18-Oct-2025
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் விவசாயி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 70; விவசாயி. இவர் வெண்கரும்பூரில் உள்ள மகள் முத்தமிழ்ச்செல்வியை பார்த்து விட்டு, தனது வீட்டிற்கு செல்ல மொபட்டில் விருத்தாசலம் - திட்டகுடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வண்டல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் உடலை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
18-Oct-2025