உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பு

நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நெல்லிக்கொல்லையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லிக்கொல்லை ஏரியின் கீழ்புறம் ஐயனார் கோவில் அருகே உள்ள 100 ஏக்கர் விளை நிலங்களில் மழைவெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பயிர்கள் அழுகி வருகிறது. இந்த வயல்வெளி பகுதிகளிலிருந்து முக்கிய வடிகால் வாய்க்கால்களை அருகே அருகே உள்ள நிலத்திற்கு சொந்தமானவர்கள் ஆக்கிரமிப்பு செய்து விளைநிலங்களாக மாற்றியுள்ளனர். விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நெல்லிக்கொல்லை ஏரியின் வடிகால் மதகுகள் உள்ள நிலையில் வாய்க்கால்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வயல்வெளிகளில் உள்ள மழைவெள்ள நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் கடந்த தேங்கி நிற்பதால் நடவு செய்துள்ள நெற்பயிர்கள் முற்றிலுமாக அழுகி வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு சம்பா நடவிற்கு 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் வடிகால்கள் இல்லாமல் பயிர்கள் அழுகி வருவதை கண்டு கவலையில் உள்ளனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வடிகால் வாய்க்கால்களை ஏற்படுத்தி தந்து பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ