உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரவள்ளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

மரவள்ளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

கடலுார்: கடலுார் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கடலுாரை அடுத்த கோதண்டராமபுரம், எஸ்.புதுார், சேடப்பாளையம், ராமாபுரம், தொண்டமாநத்தம், புதுக்குப்பம் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர்.இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை, சேலம், ஆத்துார் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்று கிழங்கு ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.அங்கு, மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாரிக்க பயன்படுத்துகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் சிறுவியாபாரிகள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.இந்த ஆண்டு மரவள்ளியை அறுவடை செய்ய துவங்கியுள்ளனர். ஆனால், விலை மிகவும் குறைவாகவே கேட்பதால் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு டன் மரவள்ளி 15ஆயிரம் ரூபாய்க்கு விலைபோன நிலையில், தற்போது 5ஆயிரத்திற்கும் குறைவாகவே கேட்கின்றனர்.இதனால் விவசாயிகள் செலவு செய்த தொகையைக் கூட பெற முடியாத அவலநிலை உள்ளது. எனவே, அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மழை பயத்தால் விவசாயிகள் அறுவடையை துவக்கிவிட்டனர். ஈரப்பதத்துடன் உள்ளதால் விலை குறைவாகப்போகும் நிலை உள்ளது.காய்ந்தால் இயல்புநிலைக்கு விலை வந்து விடும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை