உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

 குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

சிதம்பரம்: சிதம்பரத்தில் பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். 'டிட்வா' புயல் காரணமாக, சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக சிதம்பரம் தேரோடும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்படுகிறது. தாழ்வாக பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் உசுப்பூர் இந்திரா நகர் பகுதி மற்றும் லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர்., எம்.ஆர்.வி., நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடந்த முறை பெய்த மழை நீரே வடியவில்லை. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கன மழையால் இப்பகுதி குடியிருப்புகளை, முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கடந்த, 10 நாட்களாக, அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வர இயலாத சூழல் உள்ளது. பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதால், இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, சரியான முறையில் வடிகால் வசதி அமைத்து மழை நீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பழைய கொள்ளிடம் மற்றும் சி.முட்லுார் பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. வாழை, வெண்டை, கத்தரி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி