மேலும் செய்திகள்
பள்ளியில் விஷம் குடித்த மாணவி
30-Oct-2024
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் கற்பகம், 34; இவரது கணவர் அண்ணாதுரை. கணவன் மனைவி இருவரும் நடுவீரப்பட்டு வள்ளலார் நகரில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அண்ணாதுரை, கடந்த 15 நாட்களுக்கு முன் வந்தார். வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்னை நடந்து வந்துள்ளது.இதனால் கற்பகம் கோபித்துக்கொண்டு கடந்த 18 ம் தேதி காலை வீட்டிலிருந்து சென்றவரை காணவில்லை.இதுகுறித்து கற்பகத்தின் தந்தை தண்டபாணி கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Oct-2024