மேலும் செய்திகள்
கடப்பாரையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது
20-Jul-2026
கடலுார்: மகனை கத்தியால் வெட்டி தந்தையை போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி,45; இவர், நேற்று முன்தினம் மீண்டும் குடிபோதையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது தந்தை ஆறுமுகத்தை,65; திட்டினார். இதற்கு தனது மருமகள் வெண்ணிலா தான் காரணம் எனக் கூறி அவரை, ஆறுமுகம் கத்தியால் வெட்டினார். இதில், வெண்ணிலாவின் தலை மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற பஞ்சமூர்த்தியின் இடது கை விரல் துண்டானது. உடன், தம்பதியினர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
20-Jul-2026