உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்ப தகராறில் பெண் தற்கொலை

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

சேத்தியாத்தோப்பு : குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சேத்தியாத்தோப்பு அடுத்த பேரூரை சேர்ந்தவர் செல்வராசு மனைவி சசிகலா, 45; கடந்த 20ம் தேதி, கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா, இரவு 9:00 மணியளவில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.சசிகலாவின் அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை