உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு தொழிற்சாலை : ஆர்.டி.ஓ., ஆய்வு

பட்டாசு தொழிற்சாலை : ஆர்.டி.ஓ., ஆய்வு

கடலுார் : கடலுார் பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்களில் உரிய பாதுகாப்பு வசதி உள்ளதா என ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். கடலுார் ஆர்.டி.ஓ.,சுந்தர்ராஜன், சிங்கிரிகுடி, நல்லப்பரெட்டிப்பாளையம், பூஞ்சோலைகுப்பம், ஒதியம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பட்டாசு குடோன்கள், பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்ட இடங்களை நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது கடை மற்றும் குடோன்களில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என பார்வையிட்டு, குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினார். விதிகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தார். தாசில்தார் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ