உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

கடலுார்: கடலுார் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களிலும் மோட்டார் பொருத்திய ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற 25 கமாண்டோ வீரர்கள் உட்பட 276 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், 20 நீச்சல் வீரர்கள் கொண்டு 3 குழுவினர் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். மாவட்டத்தில் மரங்கள் சாய்ந்து விழுந்தால், உடனுக்குடன் அதை வெட்டி அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை