முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி சேர்மன் கதிர வன் தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு மாணவிகள் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களான பேராசிரியர்கள் பாலசிங் மோசஸ், பிரவீன், கந்தபாபு பேசினார். பேராசிரியை சிவப்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஜெயசுதா நன்றி கூறினார்.