மீன்கள் விற்பனை டல்
கடலுார்: தேவனாம்பட்டினம், தாழங்குடா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து விற்பனைக்காக கடலுார் துறைமுகத்திற்கு கொண்டு வருகின்றனர். ஞாயிற்று கிழமைகளில் மீன்கள் வாங்க மக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாதம் துவங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் மீன்கள் விற்பனை மந்தமாக நடந்தது. நேற்றும் மீன்கள் விற்பனை மந்தமாக நடந்தது. மீன் மார்க்கெட் பரபரப்பின்றி காணப்பட்டது.