உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணையாற்றில் தடுப்பணை இல்லாததால் வீணாகும் வெள்ள நீர்

பெண்ணையாற்றில் தடுப்பணை இல்லாததால் வீணாகும் வெள்ள நீர்

நெல்லிக்குப்பம்: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் திறக்கும் தண்ணீர் பெண்ணையாற்றில் ஓடி கடலூரில் கடலில் கலக்கிறது. 40 ஆண்டுக்கு முன் நெல்லிக்குப்பம் அடுத்த பகண்டையில் ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் தடுப்பணை கட்டினர். கடந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந் ததால் சொர்ணாவூர் தடுப்பணை உடைந்து சேதமானது. அதை சரி செய்யாததால் தற்போது ஆற்றில் வரும் தண்ணீர் தேங்கி நிற்க முடியாமல் அப்படியே வெளியேறுகிறது. அதிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அழகியநத்ததிலும்,கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே மட்டும் இரண்டு தடுப்பணைகள் உள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சி யில் நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தி ல் தடுப்பணை கட்டினர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதேபோல் பெண்ணை யாற்றின் குறுக்கே வாய்ப் புள்ள இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்க முடியும். நிலத்தடிநீரும் பாதுகாக்கபடும். தமிழக அரசு தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !