உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்வு

கடலுார்: ஆயுத பூஜையை முன்னிட்டு, கடலுாரில் நேற்று பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்திருந்தது.சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகையை யொட்டி வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் படையலிட்டு கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தில் பூக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இதையொட்டி கடலுார் திருப்பாதிரிபுலியூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலைஉயர்ந்து காணப்பட்டது.நேற்று முன்தினம் கிலோ 240 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி ரூ.480க்கும், அரும்பு ரூ.400ல் இருந்து ரூ. 600, மல்லிகை பூ ரூ.600ல் இருந்து ரூ.800க்கும், சாமந்தி ரூ.240ல் இருந்து ரூ.400க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ.260ல் இருந்து ரூ.500 என, உயர்ந்திருந்தது. பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை