உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு; உணவு பாதுகாப்பு துறை அதிரடி

காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு; உணவு பாதுகாப்பு துறை அதிரடி

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கடை வீதியில் காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.மந்தாரக்குப்பம் கடைவீதியில் சாலையோர மீன் கடைகளில் கெட்டு போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் மீன் கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டு போன மீன்கள் 5 கிலோ அளவில் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். கெட்டு போன மீன்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபாரதம் விதித்தனர்.தொடர்ந்து, மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள குளிர்பான கடைகளில்ஆய்வு செய்தனர். இதில், காலாவதியான 100 க்கும் மேற்பட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்வதை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனர். அடுத்த கட்ட சோதனையின் போது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை