உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: கலெக்டர் அறிவுரை

உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: கலெக்டர் அறிவுரை

கடலுார்: தீபாவளி இனிப்பு வகைகளின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, கார வகைகளின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகளை தரமான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத வகையில் பலகாரங்களை துாசிபடாத வகையில் வெள்ளை பேப்பர் அல்லது பட்டர் பேப்பர் கொண்டு மூடி வைத்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். பலகாரங்களை மூடி வைக்க எக்காரணத்தை கொண்டும் அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்தக்கூடாது. இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து பேக்கிங் செய்து விற்பனை செய்யும் பொட்டலங்களில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தொகுதி எண் உரிமம், பதிவு எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு பொருள் தொடர்பான புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ