முன்னாள் முதல்வர் நினைவு தினம்
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, அமைதி ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, கல்யாணசுந்தரம், பாஸ்கர், செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.