வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை மாஜி அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு
கடலுார் : தி.மு.க., ஆட்சியில் கடலுார் மாவட்டத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.கடலுாரில் நடந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம், அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்வு காணவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, புதிய கலெக்டர் அலுவலகம், ஜவான்ஸ்பவன் இணைப்பு சாலை, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், அருவாமூக்கு திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களை தைரியமாக மீட்டு கொண்டு வந்தோம். தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கவில்லை. துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதில் இருந்து தி.மு.க., ஆட்சி சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.