உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் வரவேற்பு

கடலுாரில் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் வரவேற்பு

கடலுார் :கடலுார் மாவட்டத்திற்கு வருகை தந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கடலுார், பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக, புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்த அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் முன்னாள் அமைச்சர், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.புதுச்சேரி எல்லை முடிந்து கடலுார் மாவட்ட எல்லை துவக்கத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பழனிசாமி உருவம் பொறித்த கட் அவுட்கள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்தன. பண்ருட்டியில் இருந்து ரெட்டிச்சாவடி வரை 43 கி.மீ., தொலைவுக்கு எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க., கொடிகள், பேனர்கள் இருந்தன. மக்கள் கூட்டம் கலையாமல் இருக்க ஆங்காங்கே கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை