உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி., எம்.பி., நினைவு நாள்

மாஜி., எம்.பி., நினைவு நாள்

சிதம்பரம்: காங்., முன்னாள் எம்.பி., கலியபெருமாள், 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடலுார் தெற்கு மாவட்ட காங்., மற்றும் நகர காங்., சார்பில், அஞ்சலி செலுத்தப்பட்டது.சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே நடந்த நிகழ்ச்சியில், காங்., மாநில செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் மக்கின் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், நிர்வாகிகள் சுந்தர்ராஜன், குமார், சண்முகசுந்தரம், வெங்கடேசன், தில்லை செல்வி முன்னிலை வகித்தனர்.தெற்கு மாவட்ட காங்., தலைவர் செந்தில்நாதன், முன்னாள் எம்.பி., கலியபெருமாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜர் பாலிடெக்னிக் இயக்குனர் தமிழரசு சம்பந்தம், ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், விவசாய சங்க தலைவர் இளங்கீரன், மாவட்ட இளைஞரணி அன்பரசன் மற்றும் ரெங்கநாதன், பகவத்சிங், திருவரசமூர்த்தி, செழியன், பார்த்திபன், சக்திவேல், குணசேகர், இளங்கோவன், சசிகுமார், ரவி, ராஜவேல், முத்துவேல், ஷர்மா, நாராயனசாமி, மகளிரணி ஜனகம், இந்திரா, ராதா அமுதவல்லி, அபி பங்கேற்றனர். குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ