உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை

முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு மேல்நிலை பள்ளியில், 1996 முதல்_2002 வரையில் படித்த மாணவர்கள் சேர்ந்து, நண்பர்கள் குழு என துவக்கி, பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நண்பர்கள் குழு சார்பில், பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நண்பர்கள் குழுவினர் சார்பில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்தானகிருஷ்ணன், ஆசிரியர்கள் நடராஜன், மக்தும், பழனிவேல், வைத்தியலிங்கம், ராமலிங்கம், விதுபாலா ஆகியோருக்கு சால்வை அணிவித்தும், பரிசு பொருட்கள் வழங்கியும் மரியாதை செலுத்தினர். விருந்து வழங்கப்பட்டது.முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை