உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

 முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.,க்கு பாராட்டு

கடலுார்: கடலுார் எஸ்.பி.,க்கு, பூண்டியாங்குப்பம் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். கடலுார் மாவட்டம், பூண்டியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 1981--82ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், எஸ்.பி.,ஜெயக்குமாரை நேரில் சந்தித்தனர். அப்போது, கடந்த, 2005ம் ஆண்டு சுதர்சனம் எம்.எல்.ஏ., கொலை செய்யப்பட்ட வழக்கில், பவாரியா கொள்ளைக் கும்பலின் குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்காற்றியமைக்காக, அவரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர். முன்னாள் மாணவர்கள் ராமச்சந்திரன், குருநாதன், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !