உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆழ்துளை கிணறு பணிக்கு அடிக்கல்

ஆழ்துளை கிணறு பணிக்கு அடிக்கல்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சியில் அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ. 13.77 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், கட்டுமான பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் யுவராணி ஜெகஜீவன்ராம், முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், கிளை செயலாளர்கள் ஞானவேல், சுப்பிரமணியன், பாலமுருகன், இளைஞர் அணி நிர்வாகிகள் ராபர்ட், விஜி, குமரவேல், சுரேஷ், ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி