உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சதித்திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது

சதித்திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது

கடலுார்; கடலுார் முதுநகர் அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் முதுநகர் சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய வண்டிப்பாளையத்தில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த சித்திரைவேல்,42, நேதாஜி,24, அஜய்,23, புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த அருணாச்சலம்,24, எனத்தெரிந்தது. மேலும் அவர்கள்கூட்டுக்கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. இதுகுறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ