மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழா
14-Jan-2026
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சிகாமாணி வரவேற்றார். சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு சைக்கி ள்கள் வழங்கினார். ஸ்ரீமுஷ்ணம் பள்ளி, கானுார், ஸ்ரீநெடுஞ்சேரி பள்ளியைச் சேர்ந்த 434 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் பழமுதிர்ச்சோலை, குமரேசன், புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
14-Jan-2026