உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் பள்ளிப்படை ஆட்டோ ஓட்டுநர் மக்கள் நற்பணி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பள்ளிப்படை ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடந்த முகாமில் சங்க தலைவர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் அப்துல் ரியாஸ், செயலாளர் வீரப்பன், அசோகன் முன்னிலை வகித்தனர். ரியாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பாண்டியன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். முகாமில், காது, மூக்கு, தொ ண்டை, எலும்பு மருத்துவம், கண் சிகிச்சை, குழந்தைகள் சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆட்டோ சங்க துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் நவாஸ், ஒருங்கிணைப்பாளர் ஆசிக், கவுரவ தலைவர் அமானுல்லா, ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிமும் அன்சாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை