இந்திய கடற்படையில் சேர இலவச பயிற்சி
கடலுார்: மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் வாரிசுகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையில் சேர்வதற்காக கடலுார், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மையங்களில் 4வது 3 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் எஸ்.பி., ஜெயக்குமார் பேசுகையில், மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அரசு பணிகளில் சேர்வதற்கு வழங்கப்பட்ட அடிப்படை பயிற்சி ஆகும். பயிற்சி பெற்ற இளைஞர்கள் மேலும் திறன்களை வளர்த்துக் கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்றார்.மீன்வளத்துறை உதவி இயக்குனர் யோகேஷ், கடோலர காவல்படை எஸ்.பி., நல்லதுரை, ஆயுதப்படை டி.எஸ்.பி., அப்பாண்டராஜ், ஆய்வாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.