உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூன்று ஜோடிக்கு இலவச திருமணம்

மூன்று ஜோடிக்கு இலவச திருமணம்

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கி, மூன்று ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், 3 ஜோடிகளுக்கும் 4 கிராம் தாலி, கட்டில், மெத்தை உள்ளிட்ட 80 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், சரக ஆய்வாளர் பிரேமா, மேலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை