உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒருங்கிணைந்த பண்ணையில் நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையில் நன்னீர் மீன் வளர்ப்பு பயிற்சி

விருத்தாசலம்: லால்பேட்டை அரசு மீன் விதை உற்பத்தி பண்ணையில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை சார்பில், ஒருங்கிணைந்த வெளிவளாக பயிற்சி நடந்தது. பயிற்சியில், பண்ணை குட்டை அமைப்பது, ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நெல், மீன், ஆடு, மாடு, கோழி, வாத்து, அசோலா, காய்கறி, தோட்டம், தீவனப்புல், காளான், தேனி, மண்புழு வளர்ப்பு, சுருள்பாசி வளர்ப்பு பற்றிய விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், 'நன்னீரில் வளரும் பால் கெண்டை மீன் இனம் குறித்து பேசினார். மேலும், சிக்கனமாக நீரை பயன்படுத்தி, அசோலா தீவனத்தை எளிதில் வயல் மண், மாட்டுசாணம் பயன்படுத்தி சிறிய குட்டைகளில் வளர்த்து சத்தான மீன் குஞ்சுகள் வளர்ப்பது குறித்து விளக்கி பேசினார்.மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதீன், விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பு பற்றி விளக்கி பேசினார். வேளாண் விஞ்ஞானி காயத்ரி' புல்கெண்டை, கெண்டை, ரோகு, கட்லா, மிர்கால் இன மீன்களுக்கு பாசிகளின் மகத்துவம், அசோலா வளர்ப்பு முறை, சுருள்பாசி இணை உணவு குறித்து விளக்கி பேசினார். பயிற்சி பெற்ற விவசாயிகள், மீன் வளர்க்கும் தொட்டிகளையும், குட்டைகளையும், தீவனம் அளிக்கும் முறையினையும் பார்வையிட்டனர்.இதில், மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை