உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது

ஜாமினில் வந்து தலைமறைவாக இருந்தவர் கைது

மந்தாரக்குப்பம்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். மந்தாரக்குப்பம் போலீசார் கடந்த, 2021 ம் ஆண்டு கொலை வழக்கில் குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிவரதன் மகன் நீலகண்டன், 28; என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். கோர்ட்டில் ஆஜராகாததை அடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த நீலகண்டனை போலீசார் கைது செய்து கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை