உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமறைவு ஆசாமி கைது

தலைமறைவு ஆசாமி கைது

சேத்தியாத்தோப்பு: கொலை மிரட்டல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் செட்டி (எ) செல்வக்குமார்,36: இவர் கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர், கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த செட்டி (எ) செல்வக்குமாரை சேத்தியாத்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி