அ.தி.மு.க., நகர செயலாளர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
பண்ருட்டி : பண்ருட்டியில் புதிதாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க., நகர செயலாளர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பண்ருட்டி நகர அ.தி.மு.க., செயலாளராக மோகன் நியமனம் செய்யப்பட்டார். இவர், நேற்று அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.முன்னாள் எம்.எல்.சி.சிவராமன், நகர அவைத் தலைவர் ராஜதுரை, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் நாகபூஷணம், ராமசாமி, இணைச் செயலாளர் சத்யா கலைமணி, நகர ஜெ., பேரவைச் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.நிகழ்ச்சியில், பழ ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தாஜூதீன், விவசாய பிரிவு மணி, மாணவரணி ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஐயப்பன், ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் முருகன், சரண்யா ரகுபதி, பிரியா பாக்கியராஜ், சுவாதி பாக்கியராஜ், வெங்கடேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமஜெயம் உட்பட பலர் பங்கேற்றனர்.