மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
31-Jan-2026
கடலுார்: கடலுார் வரதராஜன் நகரில் தமிழ் முற்றம் இலக்கிய அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், வெங்கடேசன் ஆலோசகர் மனோ, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் பச்சையப்பன் அறிக்கையை சமர்ப்பித்து எதிர்காலத்தில் அமைப்பின் நிகழ்வுகள் குறித்து பேசினார். கடலுாரில் மையப்பகுதியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும். கடலுார் மைதானத்தில் உள்ள பாபு திறந்தவெளி கலையரங்கத்தை புதுப்பித்து மீண்டும பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் வெங்கட்ரமணி நன்றி கூறினார்.
31-Jan-2026